அரசிடமிருந்து தமக்கு அழுத்தமா? : அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மறுப்பு

  அனிதா   | Last Modified : 17 May, 2019 03:06 pm
there-was-no-pressure-from-the-government-surappa

அரசிடம் இருந்து எந்தவிதமான அழுத்தமும் வரவில்லை எனவும், தமக்கு தேவையான ஒத்துழைப்பு கிடைத்து வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். 

கிண்டி பொறியியல் கல்லூரியின்  225 -வது ஆண்டு விழாவையொட்டி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மரக்கன்று நட்டு, புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.  

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆறு கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்வாகாத விவகாரத்தில், அண்ணா பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. மாணவர்களே தங்கள் படிப்பு மேல் அக்கறை எடுத்து படிக்க வேண்டும்.

92 கல்லூரிகளில் 300 பாடப்பிரிவுகளின்கீழ், 15 ஆயிரம் இடங்களை குறைத்த விவகாரத்தில், கல்லூரிகளின் பெயர்களை வெளியிட்டால் சமூகத்தில் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கும் என்பதால் தான், கல்லூரிகளின் பெயர்கள் வெளியிடவில்லை. அண்ணாப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசிடமிருந்து எந்தவிதமான அழுத்தமும் தமக்கு வரவில்லை எனவும், தனக்கு தேவையான ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close