பிறந்து 7 நாளே ஆன குழந்தையை சாலையில் வீசி சென்ற ஈவு இரக்கமற்ற பெற்றோர்!

  அனிதா   | Last Modified : 17 May, 2019 03:17 pm
parents-who-threw-the-baby

கோவை அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள கலை கல்லூரி சாலையில் வைக்கப்பட்டிருந்த கட்டைப் பையில், கதறி அழுதுக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை கல்லூரி மாணவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் சந்திரசேகர் (19) மற்றும் சத்தியதரன்(18). இவர்கள் இருவரும் நேற்றிரவு தேர்வுக்கான புத்தகங்களை வாங்கிக் கொண்டு கலைக் கல்லூரி சாலை வழியாக சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்று கதறி அழும் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் யாருமின்றி வெறிச்சோடி இருந்ததால் மாணவர்கள் சத்தம் வரும் இடத்தை நோக்கி சென்றுள்ளனர். 

அப்போது அரசு மருத்துவமனையின் பின் வாசலின் அருகே உள்ள நடைபாதையில் ஒரு கட்டப்பையில் பிறந்து 7, 8 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மருத்துவமனை ஊழியர்களுடன் குழந்தையை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இச்சம்பவம் குறித்து பந்தய சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் யார், குழந்தை எப்படி சாலையில் வீசப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close