குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்!

  அனிதா   | Last Modified : 17 May, 2019 04:11 pm
2-tons-of-gutka-seized

திருச்சியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் எடையுடைய குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், தடையை மீறி பல இடங்களில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிகரித்து வரும் குட்கா பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதிக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சித்ரா தலைமையில் திடீர் சோதனை நடைபெற்றது. 

இந்த சோதனையில் குடோன்களில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் எடையுள்ள குட்கா புகையிலை பொருட்கள் அதிகாரிகள் கைப்பற்றினர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நியமன அலுவலர் சித்ரா, நேற்றைய தினம் அசைவ ஹோட்டல்களில் நடத்தப்பட்ட சோதனையில் தரமற்ற, பழைய கறி பயன்படுத்துவது கண்டறியப்பட்டு 15 கிலோ பழைய கறிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக இன்றைய தினம் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து பெரிய கம்மாள தெரு, பெரியகடைவீதி பகுதிகளில் உள்ள நியூஸ்டோர், ராஜா ஸ்டோர் கடைகளின் குடோன்களில் சுமார் 2 டன் எடையுள்ள 2.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களும் உணவு பாதுகாப்பு தொடர்பான குறைகள் ஏதேனும் இருந்தால் 9444042322  என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகார் தெரிவித்தால் 24 மணி நேரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close