சொத்து தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!

  அனிதா   | Last Modified : 18 May, 2019 10:09 am
brothers-murdering-brother-in-property-problem

பழனி அருகே சொத்து தகராறு காரணமாக தம்பிகளே அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்தவர் தாஜூதீன். இவருக்கு ஜாகீர் உசேன், காதர் உசேன் என 2 தம்பிகள் உள்ளனர். அண்ணன் மற்றும் தம்பிகளிடையே சில நாட்களாக சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு சொத்து தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த ஜாகீர் உசேன் மற்றும் காதர் உசேன் ஆகியோர் அவரது சகோதரர் தாஜூதீனை கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் தாஜூதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஜாகீர் உசேன் மற்றும் காதர் உசேனை தேடி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close