கால்நடைகளை கொன்று ரத்தம் குடிக்கும் மர்ம விலங்கை தேடும் பணி தீவிரம்!

  அனிதா   | Last Modified : 18 May, 2019 11:52 am
the-intensity-of-the-search-for-the-mysterious-animal

மணப்பாறை அருகே கால்நடைகளை வேட்டையாடி இரத்தம் குடிக்கும் மர்ம விலங்கை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சுக்காம்படி அருகே உள்ள குருமலைக்களம் பகுதியில் சில தினங்களுக்கு முன் மர்ம விலங்குகள் நள்ளிரவில் புகுந்து 8 ஆடுகளை கடித்து இரத்தம் குடித்து கொன்றன. இதில், மேலும் 6 ஆடுகள் படுகாயமடைந்தன . இதைகண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், கால்நடைகளை தாக்கும் மர்ம விலங்குகள் மனிதர்களை தாக்குவதற்கு முன் கண்டறிந்து பிடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், வனத்துறையினருக்கும் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்நிலையில், நேற்று மாலை கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் குருமலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, இப்பகுதியில் செந்நாய் கூட்டம் சுற்றித்திரிவதாக கிராமமக்கள் சிலர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து நள்ளிரவு வரை தேடுதல் பணி நடைபெற்றது. ஆனால், எந்த விலங்குகளும் தென்படவில்லை. 

இதனால், மர்ம விலங்கின் கால் தடம் உள்ளதா? கால்நடைகளை கொல்லும் விலங்கு எது? என்பது குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மர்ம விலங்கின் நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ள மக்கள், அந்த மர்ம விலங்கை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close