முதலாளியை ஏமாற்றி 450 கிராம் தங்க நகைகளை மோசடி செய்த ஊழியர் கைது!

  அனிதா   | Last Modified : 18 May, 2019 11:48 am
employee-arrested-for-450-g-gold-jewelry-cheating

கோவையில் நகை கடை முதலாளியை ஏமாற்றி 450 கிராம் தங்க நகைகளை  மோசடி செய்து திருடிய கடை ஊழியர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் (41).  இவர், வைசியாள் வீதியில் நகை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். சங்கரேஸ்வரன் வெளியில் தங்கக்கட்டிகளை வாங்கி, அதை தங்கப்பட்டறைகளில் கொடுத்து ஆபரணங்களாக செய்து வாங்கி, அந்த ஆபரணங்களை தன் ஊழியர்கள் மூலம் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி, 5 கிலோ எடை கொண்ட ஆபரணங்களை அவரது ஊழியரான வேலாண்டிபாளையத்தை சேர்ந்த சண்முகவேல் (45) என்பவரிடம் கொடுத்து சத்தியமங்கலத்தில் உள்ள நகைகடைகளில் விற்பனை செய்துவருமாறு கூறியுள்ளார். அதன்படி, வியாபாரத்தை முடித்து விட்டு வந்த சண்முகவேல், ஒரு கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக கூறி மீதமுள்ள 4 கிலோ தங்க நகைகளை ஒப்படைத்துள்ளார். 

ஆனால் அவர், கொடுத்த ஆபரணங்களில், ரூ.13 லட்சம் மதிப்புடைய 450 கிராம் தங்க நகை குறைவாக இருந்துள்ளது. இது தொடர்பாக உரிமையாளர் அவரிடம் கேட்ட போது முறையாக பதில் தெரிவிக்கவில்லை. இதையடுத்து சங்கரேஸ்வரன் கடைவீதி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ஊழியர் சண்முகவேலுடன், ஆறுமுகம் என்பவரும் இணைந்து நகைகளை திருடி அவற்றை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்த 400 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஐந்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close