கும்பகோணத்தில் சக்கரபாணி சுவாமி திருக்கோயில் தெப்பத்திருவிழா

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 09:06 am
kumbakonam-sakrabani-temple-function

கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி சுவாமி திருக்கோவிலில், சுழலும் சுதர்சன சக்கரத்தில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணத்தில் பல சிறப்புகள் பெற்ற, அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று காலை 11மணி அளவில் சிறப்பு சுதர்சன ஹோமம் மற்றும் திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இரவு திருக்கோவில் வளாகத்திலுள்ள அமிர்த புஷ்கரணி தீர்த்த குளத்தில், ஶ்ரீவிஜயவல்லி ,ஶ்ரீ சுதர்சனவல்லித் தாயார் சமேத ஶ்ரீ சக்கரபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளியதுடன், சுழலும் ஶ்ரீ சுதர்சன சக்கரத்துடன் கூடிய நூதன தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசன‌ம் செய்தனர்.  கோயில் நிர்வாகிகள், அலுவலர்கள் மற்றும் சுதர்சன பக்தர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close