ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

  அனிதா   | Last Modified : 19 May, 2019 01:02 pm
thunderstorm-in-one-or-two-places

தமிழக உள் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக  கடலோர பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழக உள் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூர் மற்றும் ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் 2செ.மீ மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் திருவள்ளூர், நாமக்கல், திண்டுக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும்.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை  அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியசில் இருந்து குறைந்தபட்சம்  29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close