ஒரு கிராமமே அழியும் நிலை: கண்ணீர் மல்க கதறும் மக்கள்

  அனிதா   | Last Modified : 19 May, 2019 03:27 pm
one-village-is-destroying-without-water

தமிழகத்தில் பல கிராம மக்கள் தற்போது குடிநீர் இன்றி திண்டாடி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு கிராமமே அழியும் நிலை உருவாகியுள்ளதாக கிராம மக்கள் கண்ணீர் மல்க கூறுவது அனைவரையும் கலங்க வைத்துள்ளது. 

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டத்திற்குட்பட்ட நாலு கோட்டை கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் பிடித்து வரும் சூழல் இருந்துள்ளது. 

ஆனால், கடந்த ஒரு மாத காலமாக அதுவும் இல்லாத சூழ்நிலையில், குடிப்பதற்கு மட்டுமின்றி குளிப்பதற்கும், கால்நடைகளுக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உருவாகி உள்ளது. அப்பகுதி மக்கள் அனைவரும் தின கூலி வேலைக்கு செல்பவர்கள் என்பதால் விலைகொடுத்து வாங்க முடியாமல் பலர் தண்ணீர் இன்றி வறட்சியில் தவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பல புகார்கள் அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் எந்த பயனும் இல்லாத சூழ்நிலையில் அவர்கள் தங்கள் கோரிக்கையை கடிதமாக எழுதி அதன் புகைப்படத்தை வாட்ஸ்அப்-பில் ஷேர் செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இதனை அதிகமாக ஷேர் செய்வதன் மூலம் மத்திய உளவு துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று தண்ணீர் பிரச்சனையை தீர்க்க உதவ வேண்டும் என மக்களிடமே கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கடிதத்தை படிக்கும் மக்கள் அந்த புகைப்படத்தை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close