உலக நன்மை, மழை வேண்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை

  அனிதா   | Last Modified : 20 May, 2019 03:46 pm
thiruvilaku-pooja-in-subramanya-swami-temple

வைகாசி விசாகத்தையொட்டி கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை வழிபட்டனர்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் அருள்மிகு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முருகனின் ஏழாம் படைவீடு என்று போற்றப்படும் கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அச்சங்கம் சார்பில் உலக நன்மை வேண்டியும், பருவமழை பொழிய வேண்டியும், இயற்கையை பாதுகாக்க வேண்டியும் திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதில், திரளான பெண்கள் மற்றும் ஆண்கள் 108 திருவிளக்குகளை ஏற்றி உலக அமைதி, மழை வேண்டி சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close