திருப்பரங்குன்றம்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல்!

  அனிதா   | Last Modified : 20 May, 2019 04:04 pm
seal-for-the-voting-machine-room

திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் அறையில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, அமமுக, திமுக உள்ளிட்ட 37 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 74.17 % சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.

இடைத்தேர்தலில் 2,25,838 வாக்காளர்கள் வாக்களித்த நிலையில் வாக்குபதிவு செய்யப்பட்ட 297 வாக்குபதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள் சீலிடப்பட்டு பலத்த பாதுகாப்புடன் மதுரை அரசு மருத்துவகல்லூரி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு சிசிடிவி கேமிராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடத்தும் அலுவலர், பொது பார்வையாளர், வேட்பாளர்கள் மற்றும் முதன்மை வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீலிடப்பட்டது. இந்த அறையானது வரும் 23ஆம் தேதியன்று மதுரை நாடாளுமன்ற மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள், முகவர்கள் முன்பாக திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 

இது தொடர்பாக திருப்பரங்குன்றம் தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம் செய்தியாளர்களிடம் பேசுகையில் "திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்றது, வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை மற்றும் ஆவணங்கள் வைக்கப்பட்ட 2 அறைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close