விசிக நிர்வாகி அலுவலகத்தில் வருமானவரி சோதனை!

  அனிதா   | Last Modified : 21 May, 2019 03:54 pm
income-tax-raid-in-trichy

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிக்கு சொந்தமான எல்பின் நிதி நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மக்களவை தேர்தலின் போது  பெரம்பலூர் அருகில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகிகளான ரமேஷ் மற்றும் ராஜாவுக்கு சொந்தமான காரில் இரண்டு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து  திருச்சி மன்னார் புரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை  கைப்பற்றிச் சென்றனர். 

இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி  திருச்சியில்  நடந்த அறம் மக்கள் நலச் சங்கத்தின் முப்பெரும் விழா மிகுந்த பொருட்செலவுடன் கொண்டாடப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வருமானவரித்துறையினர் விழா நடத்த  பணம் எவ்வாறு கிடைக்கப் பெற்றது என்பது குறித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக இன்று மன்னார்புரத்தில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close