இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பலி!

  அனிதா   | Last Modified : 22 May, 2019 10:40 am
road-accident-in-kumbakonam

கும்பகோணம் அருகே இரண்டு இருசக்கரவாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த வளையப்பேட்டை மாங்குடி மாதாகோயில் தெருவை சேர்ந்தவர் அபிமன்யு (18). இவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் கும்பகோணம் நோக்கி சென்றுள்ளார். அப்போது திருவிடை மருதூர் மாதா கோவில் பகுதியை சேர்ந்த லியோ(21), தனது நண்பர்கள் சுதர்சன் (22) சுகந்தன் (27) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

மாங்குடி அருகே வந்தபோது லியோ முன்னாள் சென்ற காரை முந்தி செல்ல முயன்றபோது அபிமன்யுவின் வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லியோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 3 பேரும் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தாலுக்கா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close