சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.83 லட்சம் காணிக்கை!

  அனிதா   | Last Modified : 22 May, 2019 11:45 am
rs-83-lakhs-input-to-the-samayapuram-mariamman-temple

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.83.37 லட்சம் ரொக்கம், 2 கிலோ 262 கிராம் தங்கம், 9 கிலோ 659 கிராம் வெள்ளி காணிக்கையாக பெறப்பட்டுள்ளன. 

மிகவும் பிரசித்திபெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவதுண்டு. இத்தகைய கோவிலில் விஷேச நாட்களில் மட்டும் காணிக்கைகள் விரைவில் எண்ணப்படுவது வழக்கம்.

அந்த வகையில்,  பக்தர்கள் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் இன்று எண்ணப்பட்டது. இதில் ரூ.83,37,752 ரொக்கம், 2கிலோ 262 கிராம் தங்கம், 9 கிலோ 659 கிராம் வெள்ளி, 64 வெளிநாட்டு பணம் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close