வாக்கு எண்ணும் பணியை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

  அனிதா   | Last Modified : 22 May, 2019 01:47 pm
the-security-are-intensifying-for-vote-count

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணும் பணியை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

வடசென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூயில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாளை வாக்கு எண்ணும் பணி நடைபெற இருப்பதையொட்டி அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " ஒவ்வொரு மையத்துக்கும் 750 போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் எனவும் தெரிவித்தார். சென்னையில் உள்ள 3 மையங்களில் மட்டும் 5000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என்றும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close