பட்டப்பகலில் 3 வயது குழந்தை கடத்தல்!

  அனிதா   | Last Modified : 22 May, 2019 02:59 pm
3-year-old-kid-kidnapping

சேலம் சத்திரம் அருகே குடியிருப்பு பகுதியில் விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தை பட்டப்பகலில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் சத்திரம் பகுதியை அடுத்த முள்ளாகாடு பகுதியை சேர்ந்த பாலாஜி - நித்யா தம்பதியின் 3 வயது குழந்தை யோகேஸ்வரன் இன்று மதியம் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அப்போது, இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் குழந்தையை கடத்தி சென்றதை கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து அவரது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

பதறிபோன பெற்றோர் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். ஆனால், சாலையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் இயங்காமல் இருப்பதால் கடத்தியவர்களை கண்டிறிய முடியாமல் திணறியுள்ளனர். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close