குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை முயற்சி!

  அனிதா   | Last Modified : 22 May, 2019 03:45 pm
mother-was-killed-the-children-and-try-to-suicide

சென்னை மதுரவாயல் அருகே 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை போரூர் தாமஸ் தெருவைச் சேர்ந்தவர் சிபிராஜ் (38). இவரது 2வது மனைவி சைஜா (29). இவர்களுக்கு ஸ்ரீலட்சுமி (3), என்ற மகளும், ஆதிதேஷ்(2) என்ற மகனும் இருந்தனர். சிபிராஜ் சினிமா துறையில் பைனான்சியராக பணியாற்றி வந்த நிலையில் சிறுநீரகம் பழுதடைந்ததால் உடல் நிலை மோசமடைந்த அவர் கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதையடுத்து, சைஜா 2 குழந்தைகளையும் மிகுந்த சிரமத்துடன் வளர்த்து வந்தார். இதற்காக பல இடங்களில் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. எந்த வருமானமும் இல்லாமல் குழந்தைகளை வைத்து கொண்டு வேலைக்கும் செல்ல முடியாமல் கஷ்டத்துடன் இருந்த சைஜா, கடன் பிரச்சனை காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். 

இதையடுத்து, நேற்றிரவு  ஸ்ரீலட்சுமி மற்றும் ஆதிதேஷ் ஆகிய இருவருக்கும் விஷம் கொடுத்து கழுத்தை நெரித்தும் கொலை செய்த சைஜா தானும் விஷம் குடித்துள்ளார். இதனிடையே, இன்று காலை கேரளாவிலிருந்து வந்த சிபிராஜின் நண்பர் ஜினத், சிபிராஜின் வீட்டுக்கு வந்துள்ளார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தும் பல முறை கூப்பிட்டும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர், ஜன்னல் வழியாகப் பார்த்த போது குழந்தைகளும், சைஜாவும் மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது.

உடனே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரையும் ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் இருவரும் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். சைஜா தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close