சேலத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்பு!

  அனிதா   | Last Modified : 22 May, 2019 04:40 pm
3-year-old-kid-was-rescue

சேலம் முள்ளாகாடு பகுதியில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை யோகேஸ்வரன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் சத்திரம் பகுதியை அடுத்த முள்ளாகாடு பகுதியை சேர்ந்த பாலாஜி - நித்யா தம்பதியின் 3 வயது குழந்தை யோகேஸ்வரன் இன்று மதியம் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அப்போது, இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் குழந்தையை கடத்தி சென்றதை கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து அவரது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

பதறிபோன பெற்றோர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். ஆனால், சாலையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் இயங்காமல் இருப்பதால் கடத்தியவர்களை கண்டிறிய முடியாமல் திணறி வந்த நிலையில் கடத்தப்பட்ட குழந்தையை  போலீசார் மீட்டுள்ளனர். 

குழந்தையை கடத்தியவர்கள் சேலத்தாம்பட்டி பகுதியில் குழந்தையை விட்டு சென்றுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து குழந்தையை கடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close