சிங்கப்பூரில் இருந்து நூதனமாக கடத்தி வந்த தங்கக்கட்டிகள் பறிமுதல்!

  அனிதா   | Last Modified : 23 May, 2019 09:22 am
gold-seized-in-trichy-airport

திருச்சி விமானநிலையத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.6 லட்சம் மதிப்புடைய 2 தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமான பயணிகளின் உடைமைகளை திருச்சி விமானநிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஐயன் பாக்ஸ்க்குள் 199 கிராம் தங்க கட்டியை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close