பலரையும் கவர்ந்த பழமையான பாரம்பரிய வாகனங்கள் கண்காட்சி

  Newstm Desk   | Last Modified : 24 May, 2019 08:53 pm
exhibition-of-the-oldest-traditional-vehicles-attracted-by-many

தமிழ்நாடு அனைத்து ஆட்டோமொபைல் பெடரேசன் சார்பில் பழமையான கார்களை மிகவும் விருப்பத்துடன் பராமரிக்கும் கார் பிரியர்களுக்கு உற்சாகம் அளிக்கும்வகையில் திருச்சியில் பழங்கால கார்கள் அணிவகுப்பு மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி முதன்முறையாக இன்று நடைபெற்றது.

இந்த கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் மகாலில் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது
கண்காட்சி முதல் நாளான இன்று ஆஸ்டின், வோல்ஸ்வேகன், கௌலி, இத்தாலியன் பியட், சவர்லட், மோரீஸ், அம்பாசிடர் கார், ஸ்டான்டர்ட் மற்றும் வில்லீஜ் ஜீப் என 20 நான்கு சக்கர வாகனங்கள் திருச்சியில் மத்திய பேருந்துநிலைய சாலையில் அணிவகுத்து சென்றன.

இந்த பழங்கால பாரம்பரிய கார்களை, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பார்த்து மகிழ்ந்தனர்.

அதேபோல இருசக்கர வாகனபிரியர்களை கவரும்வகையில் பாரம்பரிய ராயல் என்பீல்டு, புல்லட், லேம்பி, லேம்பரட்டா ஆகிய 20 இருசக்கர வாகனங்களும் இடம்பெற்றிருந்தன. இந்த பாரம்பரிய இருசக்கர மற்றும்  நான்கு சக்கர வாகனங்களின் கண்காட்சி பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவமாக இருந்ததுடன், கண்டுமகிழ்ந்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close