மான் வேட்டை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது!

  அனிதா   | Last Modified : 25 May, 2019 09:14 am
the-culprit-was-arrested-in-the-deer-hunt-case

மான் வேட்டை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த செமணாம்பதி, செம்மேடு பகுதிகளில் சிலர் மான் வேட்டையாடியதாக வனத்துறையினருக்கு புகார் வந்ததையடுத்து பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, செம்மேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (48 ). மாரப்பக் கவுண்டன் புதூரை சேர்ந்த தமிழரசன் (38 ) பெரியபோதுவை சேர்ந்த சுந்தர்ராஜ் ( 51 ) கேரள மாநிலம் நெடும்பாறையை சேர்ந்த பிரகாஷ் (29) மாரப்பக் கவுண்டன் புதூரை சேர்ந்த துரைசாமி (62 ) ஆகியோர் மான் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதையடுத்து, கடந்த 5ம் தேதி பாலகிருஷ்ணன், சுந்தர்ராஜ், பிரகாஷ், துரைசாமி ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தமிழரசன் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் வனத்துறையினர் நேற்று தமிழரசனை கைது செய்தனர். தமிழரசன் கொடுத்த தகவலின் அடிப்படையில், மான் வேட்டையில் தொடர்புடையை மாரப்பகவுண்டன்புதூரை சேர்ந்த கணேசன்(35), காளிமுத்து(எ)கனகராஜ்(55) ஆகியோரையும் கைது செய்தனர்.

மான் வேட்டை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழரசன் ஏற்கனவே யானையை தந்தத்திற்காக வேட்டையாடி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். தற்போது வெளியில் வந்து மீண்டும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மான், முயல், காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை 1 கிலோ ரூ.1000 முதல் 1500 வரை விற்பனை செய்துள்ளனர்.

கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த பலர் இறைச்சியை வாங்கி சென்றுள்ளனர். அவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர்களையும் கைது செய்ய இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close