தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு!

  அனிதா   | Last Modified : 25 May, 2019 11:01 am
the-girl-s-death-in-the-elephant-attack

பொள்ளாச்சி அருகே உள்ள தாய் கண்முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே உள்ள நவமலை பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வேட்டை தடுப்பு காவலர் ராஜீ. இவரது மனைவி சித்ரா. இவர்களது 7 வயது மகள் ரஞ்சனா (எ) ரஞ்சனி அங்குள்ள அரசு பள்ளியில் 2"ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சித்ரா மற்றும் ரஞ்சனி இருவரும் பொள்ளாச்சி சென்று விட்டு பேருந்தில் வீடு திரும்பியுள்ளனர்.  

நவமலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை ஒன்று இருவரையும் துரத்தியது. இதில் அலறியடித்து ஓடிய சிறுமி ரஞ்சனாவை யானை தாக்கியது. இதைகண்டு சித்ரா கதறி அழுது கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தபோது யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. 

உடனடியாக படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close