போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் சென்னையில் கைது!

  அனிதா   | Last Modified : 25 May, 2019 11:33 am
addictive-stuff-gang-leader-arrested-in-chennai

சென்னையில் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனை போலீசார் கைது செய்துள்ளனர். 

மும்பை மற்றும் டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 25 கிலோ சியோடோஎபிடிரைன் (Pseudoephdrine) என்ற போதைப் பொருள் சிக்கியது.  இது தொடர்பாக 4 பேரை கைது செய்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கைது செய்யப்பட்ட 4 பேரும்  சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதும், கடத்தல் கும்பலின் தலைவன் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இயக்குனர் புருனே தலைமையிலான தனிப்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

இதன் அடிப்படையில் கடத்தல் கும்பல் தலைவனை போலீசார் கைது செய்தனர். அதுமட்டுமின்றி சூளைமேடு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 49.5 கிலோ போதை பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close