சென்னை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரை மிரட்டிய 4 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை மாம்பலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சம்பத்தை காவலர்கள் சதீஷ்குமார், விஜய் கார்த்திக், சிவபாலன், மனோஜ் ஆகிய 4 பேர் மிரட்டியதாக தென் சென்னை இணை ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காவலர்கள் 4 பேரும் ஆய்வாளரை மிரட்டியது உறுதியானது. இதையடுத்து காவல் ஆய்வாளரை மிரட்டிய காவலர்கள் 4 பேரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தென்சென்னை இணை ஆய்வாளர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, "மதுரை நகை கொள்ளை குற்றவாளியிடமிருந்து கைப்பற்றிய 100 சவரன் நகையில், 30 சவரன் நகையும், ரூ.3.5 லட்சம் ரொக்கத்தை ஆய்வாளர் மறைத்து வைத்தை எதிர்த்து கேட்டதற்காக 4 பேர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும், பொய் புகார் அளிக்கப்பட்டதற்கான ஆதாரத்தோடு காவல் ஆணையரை சந்தித்து நடந்தவற்றை எடுத்துகூற இருப்பதாகவும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
newstm.in