போதை பொருள் விற்பனை: 5 பேர் கைது!

  அனிதா   | Last Modified : 25 May, 2019 03:20 pm
drug-sale-5-people-arrested

சென்னை வளசரவாக்கத்தில் போதைப் பொருள் வைத்திருந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 10 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். 

சென்னை வளசரவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் போதை பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் வந்ததையடுத்து காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, துணை காவல் ஆய்வாளர்கள் தீர்த்கிரி, ஜெயராமன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு காண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில், நேற்றிரவு வளசரவாக்கம், ஆற்காடு சாலை, மாந்தோப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களை சோதனை செய்ததில், அவர்களிடம் ஒரு கிலோ எடை கொண்ட போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் குன்றத்தூர் நந்தம்பாக்கத்தை சேர்ந்த அமர்நாத்(25), சரவணன்(26), வில்லிவாக்கத்தை சேர்ந்த முருகேசன் (என்ற) குமார்(33), தமிழ்வாணன்(47),  சசிதரன்(29), உள்ளிட்ட 5 பேரையும் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்த போதை பொருட்கள் ராமநாதபுரத்தில் இருந்து நண்பர்கள் மூலமாக இவர்களுக்கு  வந்ததாகவும் அதனை இங்கு உள்ள நண்பர்களிடம் கொடுத்துவிட்டு பணம் வாங்க வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இவர்களுக்கு இந்த போதை பொருளை விற்பனை செய்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close