பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து!

  அனிதா   | Last Modified : 25 May, 2019 02:59 pm
electric-train-service-canceled

பராமரிப்பு பணி காரணமாக, இன்று இரவு 9.15 மணி முதல் மே 26ம் தேதி காலை 10.15 மணி வரை அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில்: திருநின்றவூர் - திருவள்ளூர் இடையே வேப்பம்பட்டு பயணிகள் சுரங்க நடைபாதை பணிக்காக மே 25ம் தேதி இரவு 10.15 மணி முதல் மே 26ம் தேதி காலை 10.15 மணி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

மே 25ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9.15 மணிக்கு அரக்கோணம் புறப்படும் ரயில், இரவு 9.40 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்குக்கு புறப்படும் ரயில், இரவு 9.40க்கு திருவள்ளூர் புறப்படும் ரயில், இரவு 10 மணிக்கு ஆவடிக்கு புறப்படும் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

மேலும், இரவு 10.15 மணிக்கு அரக்கோணம் புறப்படும் ரயில், இரவு 10.35க்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்குக்கு புறப்படும் ரயில், இரவு 10.45 மணிக்கு அரக்கோணம் புறப்படும் ரயில், இரவு 11.10க்கு  திருவள்ளூர் புறப்படும் ரயில், இரவு 11.25க்கு ஆவடி புறப்படும் ரயில், இரவு 11.45க்கு திருவள்ளூர் புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரையில் இருந்து ஆவடிக்கு இரவு 9.15, 11.15 மணிக்கு புறப்படும் ரயில், பட்டாபிராமில் இருந்து இரவு 10.45 மணிக்கு சென்ட்ரல் புறப்படும் ரயில், இரவு 11.55 மணிக்கு ஆவடிக்கு புறப்படும் ரயில், திருவள்ளூரில் இருந்து இரவு 8.50க்கு சென்ட்ரல் புறப்படும் ரயில், இரவு 9.55க்கு அரக்கோணம் புறப்படும் ரயில், இரவு 10.10க்கு ஆவடி புறப்படும் ரயில், அரக்கோணத்தில் இருந்து மாலை 6.55, இரவு 9.45 மணிக்கு சென்ட்ரல் புறப்படும் ரயில், இரவு 9.55 மணிக்கு ஆவடி புறப்படும் ரயில், திருத்தணியில் இருந்து இரவு 9.45 மணிக்கு சென்ட்ரல் புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மே 26ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.50 மணிக்கு திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில் (ரயில் எண்:66047) சென்ட்ரல் - அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது. அந்த ரயில் அரக்கோணத்தில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும். அரக்கோணம்-சென்னை கடற்கரைக்கு காலை 6.25 மணிக்கு இயக்கப்படும் விரைவு பாசஞ்சர் ரயில் அரக்கோணம் -ஆவடி இடையே ரத்து செய்யப்படுகிறது. அந்த ரயில் ஆவடி-சென்னை கடற்கரை இடையே இயங்கும்.

அதேபோல் மே 26ம் தேதி சென்னை-அரக்கோணம், சென்னை-எண்ணூர் வழித்தடத்தில் இயக்கப்படும் 150 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close