குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்!

  அனிதா   | Last Modified : 25 May, 2019 03:24 pm
the-poster-of-the-family-problem

மதுரையில் குடும்ப பிரச்சினையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபரின் சுவர் விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவர் தன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி கர்ணனின் மனைவி தனது குழந்தைகளுக்கு காதணி விழா நடத்தியுள்ளார். இதை அறிந்த கர்ணன், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என நூதன முறையில் போஸ்டர் அடித்து அதனை மதுரை முழுவதும் ஒட்டியுள்ளார். 

குடும்பத்தகராறை போஸ்டர் அடித்து ஊருக்கு தெரியபடுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நகைச்சுவையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இந்த சுவரொட்டியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close