பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..

  அனிதா   | Last Modified : 26 May, 2019 10:50 am
the-famous-rowdy-s-head-was-cut

மதுரையில் பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசிசென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

மதுரை மாவட்டம் முத்துபட்டியை அடுத்த அய்யனார்புரம் 4வது தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி சௌந்தரபாண்டி (வயது 43). இவர் மீது கொலை, கொள்ளை, கஞ்சா, சாராயம் காய்ச்சுவது,  அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, என தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் 18-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் நேற்று மதியம் சௌந்தரபாண்டி அவருடைய உறவினர் (மாமா) வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் உள்ளே நுழைந்த  5 பேர் கொண்ட மர்ம கும்பல் தூங்கிக்கொண்டிருந்த சௌந்தரபாண்டியனை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதோடு உயிருக்கு போராடி கொண்டிருந்த சௌந்திரபாண்டியனின் தலையை துண்டாக வெட்டி கையில் எடுத்து சென்று மதுரை வசந்த நகர் ரயில்வே தண்டவாளம் அருகே வீசிவிட்டு தப்பிசென்றுள்ளனர். 

சௌந்தரபாண்டியை வெட்டியபோது அதை தடுக்க முயன்ற அவரது உறவினரையும் மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சௌந்தரபாண்டியின் தலையில்லா உடலை கைப்பற்றினர். தொடர்ந்து அவரது தலையை தேடி கண்டெடுத்து உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவீர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close