வாழைத் தோப்பில் இறந்த நிலையில் இளைஞர் உடல் மீட்பு!

  அனிதா   | Last Modified : 26 May, 2019 11:53 am
the-young-man-dead-body-was-recovered

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வாழைத் தோப்பில் இளைஞர் ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (22). டிப்ளமோ படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தபடியே வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவரது நண்பர் ஹரி என்பவருடைய காரை ஓட்டி பார்ப்பதற்காக வாங்கிச் சென்றுள்ளார். இவர் ஓட்டிச் சென்ற கார் எரகுடி. பாலம் அருகே வந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த சிதம்பரம் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதனால் பயந்து போன கார்த்திக் அந்த இடத்தில் நிற்காமல் உடனே காரை எடுத்துக்கொண்டு வேறு இடத்துக்குச் சென்று விட்டார். இதை அறிந்த சிதம்பரத்தின் உறவினர்கள் சிலர் கார்த்திக்கை பிடித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த கார்த்திக்கின் சகோதரர் அவரை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு தாக்குதல் நடந்தியவர்களிடம்  சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்பொழுது சிதம்பரம் என்பவருக்கு கடுமையாக காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் மருத்துவமனை செலவுக்காக ரூ.10,000 தரும்படியும் கேட்டுள்ளனர். இதையடுத்து கார்த்தியின் தந்தையும் அவருடைய சகோதரரும் காயமடைந்த சிதம்பரத்திடம் ரூ.8000 கொடுத்துவிட்டு சமாதான பேச்சுவார்த்தை முடித்துவிட்டு வீடு திரும்பினர்.

வீட்டுக்கு வந்து நீண்ட நேரமாகியும் கார்த்திக்கை காணாததால் அருகில் உள்ள பகுதிகளில் அவரை தேடி பார்த்தனர். இந்நிலையில் எரகுடி சுடுகாடு அருகே உள்ள வாழைத் தோப்பில் கார்த்திக் பிணமாக கிடந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த கார்த்திக்கின் தந்தை துறையூர் காவல்துறை நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் உனடியாக வந்த காவல்துறையினர் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காலையில் காரை ஓட்டிச் சென்று இருசக்கர வாகனம் மீது மோதி காயமடைந்தவரின் உறவினர்களால்  தாக்குதலுக்கு உள்ளான கார்த்திக் மாலையில் வாழைத்தோப்பில் பிணமாக கிடந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close