சின்ன தம்பி நல்ல உடல்நலத்துடன் இருக்கிறது: வனத்துறை

  அனிதா   | Last Modified : 26 May, 2019 12:16 pm
chinna-thambi-is-with-good-health-forest-department

விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி காட்டு யானை 100-வது நாளாக மரக் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது. 

பன்னிமடை மற்றும் தடாகம் பகுதிகளில் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் அளித்த புகாரின் அடிப்படையில் கோவையில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பி வரகலியாறு வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

ஆனால், அங்கிருந்து மீண்டும் வெளியேறிய சின்னத்தம்பி, திண்டுக்கல் மற்றும் உடுமலைபேட்டை பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்கு புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து, பல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி நள்ளிரவில் சின்னத்தம்பி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மரக் கூண்டில் அடைக்கப்பட்டது. இன்றுடன்  சின்னத்தம்பி கூண்டில் அடைக்கப்பட்டு 100 நாட்களை எட்டியுள்ளது.  

மக்களவை மற்றும் இடைத்தேர்தல்கள் முடிந்த நிலையில், தற்போது வனத்துறையின் அலட்சியத்தால், கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சின்னத்தம்பி நோய் வாய்பட்டு கீழே விழுந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி செய்திகள் பரவி வருகின்றன. இந்தத் தகவல்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பக உயரதிகாரிகள் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சின்னத்தம்பி நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும், பாகன்கள் மற்றும் மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

மேலும், சின்னத்தம்பிக்கான பயிற்சி காலங்கள் முடிந்து, கூண்டில் இருந்து வெளியே விடும் நேரம் நெருங்கி விட்டது. இது போன்ற வதந்தியான தகவல்களை தவிர்த்தால், அமைதியாக எங்களது பணி முடியும். இதுபோன்ற யானைகளை அடக்கி கையாளுவதற்காக, வரகலியாறு யானைகள் பயிற்சி முகாமில் இருந்து நன்கு அனுபவம் கொண்ட பாகன்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பாகன்கள் ஏற்கனவே பல்வேறு யானைகளை வெற்றிகரமாக கையாண்டுள்ளனர். பொதுவாக, கூண்டில் அடைக்கப்படும் காட்டு யானைகளின் குணங்களில் ஆக்ரோஷம் காணப்படும். இதனால், மயக்க மருந்துகள் அளிக்கப்பட்டு, அமைதிபடுத்தப்படும். ஆனால், சின்னத்தம்பியிடம் இதுபோன்ற குணங்கள் எதுவும் தென்படவில்லை," என்கின்றனர் வனத்துறை உயர் அதிகாரிகள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close