ஜெகநாத பெருமாள் கோவில் திருத்தேரோட்டம்!

  அனிதா   | Last Modified : 26 May, 2019 12:45 pm
jeganatha-perumal-temple-festival

கும்பகோணத்தில் ஜெகநாத பெருமாள் திருக்கோவிலில்  வைகாசி விசாகத்தை முன்னிட்டு நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து சென்றனர். 

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் ஸ்ரீ வானமாமலை மடத்திற்கு சொந்தமான 21 ஸ்தலத்தில் ஜெகநாத பெருமாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் வைகாசி விசாக உற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும், காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 

முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று, ஜெகநாத பெருமாள் செண்பகவள்ளி தாயார் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close