ஜல்லிக்கட்டு போட்டி: 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

  அனிதா   | Last Modified : 26 May, 2019 05:54 pm
jallikattu-competition-more-than-700-bulls-participating

திருச்சி மாவட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகேயுள்ள பள்ளப்பட்டியில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு  ஜல்லிக்கட்டு போட்டி இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.  இப்போட்டியில் திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து  700- க்கும் மேற்பட்ட  காளைகள் பங்கேற்றன.

பல்வேறு ஊர்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள்  கலந்து கொண்டு வாடிவாசல் வழியாக துள்ளி குதித்து வந்த காளைகளை கட்டிதழுவி அடக்க முயன்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு ஊர்களில் இருந்தும் இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் போட்டியை காண குவிந்திருந்தனர். 

போட்டியில் அமைச்சர் விஜயபாஸ்கர் வளர்த்து வந்த சின்ன கொம்பன் என்று அழைக்கப்படும் காளை கலந்துகொண்டு வீரர்களின் கைகளில் பிடிபடாமல் எல்லையை கடந்து சென்று தங்க நாணயத்தை வென்றது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close