3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்

  அனிதா   | Last Modified : 27 May, 2019 11:27 am
3-years-old-girl-was-killed

கோவை கரட்டுமேடு பகுதியில் தலை மற்றும் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. 

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவருக்கும் அவரது மனைவி ரூபிணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ரூபிணி தமிழ்ச்செல்வன் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அவரது 3 வயது குழந்தை தேவிஸ்ரீயை தமிழ் செல்வன் அழைத்து சென்றுள்ள நிலையில், குழந்தை தேவிஸ்ரீ இன்று கரட்டுமேடு பகுதியில் தலை மற்றும் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தமிழ் செல்வன் கொலை செய்திருப்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக தாய் ரூபிணியிடம் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தலைமறைவாக உள்ள தமிழ்செல்வனை தேடி வருகின்றனர். மேலும், சிறுமி கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close