ரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்!

  அனிதா   | Last Modified : 27 May, 2019 12:45 pm
rs1-56-crores-money-throwing-on-the-road

சென்னை கோட்டூர்புரம் அருகே ரூ.1.56 கோடி பணத்தை சாலை வீசி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கோட்டூர்புரம் அருகே நேற்றிரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் இருசக்கரவாகனத்தில் சென்ற  இருவரை போலீசார் வழிமறித்துள்ளனர். ஆனால், மர்ம நபர்கள் வாகனத்தை நிறுத்தாமல் கையில் வைத்திருந்த பையை தூக்கி வீசிவிட்டு தப்பிசென்றுள்ளனர். 

இதையடுத்து, மர்ம நபர்களை பின்தொடர்ந்த போலீசார் அவர்களை பிடிக்கமுடியாமல் திரும்பினர். மேலும் அவர்கள் வீசிவிட்டு சென்ற பையை சோதனையிட்டபோது, அதில் ரூ.1.56 கோடி ரொக்கம் இருந்தது தெரியவந்தது. பணத்தை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close