ராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு!

  அனிதா   | Last Modified : 27 May, 2019 12:43 pm
rahul-gandhi-is-the-next-prime-minister-thirunavukkarasar

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக நிச்சயம் வருவார் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், திருச்சி மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாளையொட்டி, சென்னை கத்திப்பாராவில் உள்ள நேருவின் சிலைக்கு திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்றும், ராகுல் காந்தி நிச்சயமாக அடுத்த பிரதமராக வருவார்" என்றும் கூறினார். 

மேலும், தேர்தலd வெற்றி, தோல்வி ஒரு தலைவரின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடியதல்ல என்றும், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பில்லை என்பதால் அவர் பதவி விலகமாட்டார்" எனவும் அவர் தெரிவித்தார். 

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close