பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்!

  அனிதா   | Last Modified : 27 May, 2019 01:20 pm
rajinikanth-participate-in-pm-s-swearing-in-ceremony

டெல்லியில் வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ள பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளார். 

மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றதையடுத்து மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. குடியரசுத்தலைவர் மாளிகையில், வரும் 30ஆம் தேதி நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். மேலும், நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்கிறது. 

இந்நிலையில், பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த்க்கு நட்பு ரீதியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தர்பார் திரைப்படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நாளை மதியம் மும்பை செல்லும் ரஜினிகாந்த், அங்கிருந்து மே 30ம் தேதி டெல்லிக்கு சென்று பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 

இந்நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தமிழக கூட்டணி தலைவர்களும்,  இலங்கை அதிபர் சிறிசேனா உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close