பொள்ளாச்சி: உயிர் பலி வாங்கிய காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி!

  அனிதா   | Last Modified : 29 May, 2019 01:04 pm
pollachi-wild-elephant-repel-into-the-forest

பொள்ளாச்சி அருகே நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் புகுந்து 2 பேரின் உயிரை பறித்த ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள நவமலை பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் கடந்த 24”ம்”தேதி இரவு புகுந்த காட்டு யானை ஒன்று ரஞ்சனா என்ற 7 வயது சிறுமியை தாக்கியத்தில் சிறுமி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். அந்த சோகம் தீரும் முன்பே, அடுத்த நாள் இரவு அதே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அந்த காட்டு யானை மாகாளி என்ற முதியவரை மிதித்து கொன்றது. இச்சம்பவங்கள் அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது,

இது குறித்து விசாரணை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகளை மக்கள் சிறைபிடித்து யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காட்டு யானையை விரட்ட டாப்சிலிப் யானை முகாமில் இருந்து பரணி மற்றும் சுயம்பு என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கபட்டது. 

பகல் நேரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் அந்த காட்டு யானை மாலைநேரத்தில் குடியிருப்பு பகுதியில் வருவதை தடுக்க வனத்துறையினர் 4 குழுக்களாக பிரிந்து கும்கி யானை உதவியுடன் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக்ரோசமாக காணபடும் அந்த யானை தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் வரும் என்பதால் மலைவாழ் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

மின்சாரம் இல்லாமல் குடிசையில் வாழ்ந்து வரும் தங்களுக்கு உயிர் பாதுகாப்பு அளிக்கும் அடிப்படை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close