அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! வெயில் குறையுமா?

  Newstm Desk   | Last Modified : 29 May, 2019 12:53 pm
agni-natchathiram-is-going-to-be-finished-today

தமிழகத்தில் கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைவதால், வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

தமிழகத்தில் கடந்த 5-ந்தேதி முதல் அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) தொடங்கியது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

மாலை நேரங்களில் மக்கள் பார்க், பீச்-களில் தஞ்சம் புகுந்தனர். இதனால் பொது இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது 

வெப்பநிலையை பொறுத்தவரையில், பல நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. மக்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தது. 

ஆனால், சென்னையை பொறுத்தவரை இந்த முறை கோடை மழைதலையை கூட காட்டவில்லை. இதனால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். 

இந்நிலையில், கத்திரி வெயில் இன்றுடன்(29ஆம் தேதி) முடிவடையவுள்ளதால், வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. மக்களும் இதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close