மானை வேட்டையாடிய நாய்கள்!

  அனிதா   | Last Modified : 30 May, 2019 11:21 am
dogs-hunted-on-deer

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் சுற்றி திரிந்த மானை, நாய்கள் வேட்டையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

மருதமலை அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டி பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. எனவே, பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் வனவிலங்குகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், நேற்றிரவு மான் கூட்டங்கள் பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் உலா வந்துள்ளது.

அப்போது, நாய்கள்  துரத்தியதில் ஒரு மான் நாய்களின் கூட்டத்தில் சிக்கியது. அந்த மானை நாய்கள் கடித்து குதறியதால், பலத்த காயமடைந்த மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் பாதுகாவலர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close