குமரியில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு..!

  டேவிட்   | Last Modified : 31 May, 2019 08:33 am
electricity-production-increased-in-kanyakumari

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவக் காற்று தொடங்கியுள்ளது. இதனால் ஆரல்வாய்மொழியில் உள்ளகாற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்குப் பருவக் காற்று காலம் ஆண்டுதோறும் மே மாத இறுதி முதல் செப்டம்பர் மாதம் வரை இருக்கும். இந்த காலக் கட்டங்களில் அதிகளவு மின் உற்பத்தி நடைபெறும். நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு காற்றாலை மூலம் சுமார் 3 ஆயிரத்து 500 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  தற்போது 12  ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய காற்றாலை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவக் காற்று தொடங்கியுள்ளதால், ஆரல்வாய்மொழியில் உள்ளகாற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close