மதுரையில் பழமையான வீரகாளியம்மன் கோவில் திருவிழா

  Newstm Desk   | Last Modified : 31 May, 2019 04:12 pm
madurai-virakaliyamman-temple-function

மதுரை ஜெய்ஹிந்துபுரத்திலுள்ள  நூறாண்டுகளுக்கும் மேல் பழமையான வீரகாளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில்  5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேல் குத்தியும், பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் அமைந்துள்ளது பழமையான வீரகாளியம்மன் திருக்கோவில், இந்த கோவிலின் வருடாந்திர திருவிழா ஒரு வாரத்திற்கும் மேலாக சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த வருட திருவிழாவின் முக்கிய நிகழ்வான பால் குட ஊர்வலம் இன்று காலை மதுரை யானைக்கல் வைகை ஆற்றில் இருந்து கிளம்பி சிம்மக்கல் - யானைக்கல் சந்திப்பு, கீழமாசிவீதி, தெற்குவாசல், வழியாக ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோவிலை வந்தடைந்தது.

இந்த ஊர்வலத்தில் 10000க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பால்குடம் எடுத்தும் வேல்குத்தியும், பறவை காவடி, ஊஞ்சல் காவடி என பல்வேறு காவடிகள் எடுத்தும், ஆணி காலணி எடுத்தும் பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.

மேலும் இந்த திருவிழா மற்றும் ஊர்வல‌த்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். வீரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் விழா கோலம் பூண்டிருந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close