5 ஆண்டுகால ஆட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பது ஒரு இந்தியனான என் ஆசை: கமல்ஹாசன்

  அனிதா   | Last Modified : 01 Jun, 2019 01:42 pm
my-wish-for-an-indian-is-that-the-5-year-rule-should-be-good-kamal-hassan

பிரதமர் மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பது ஒரு இந்தியனான என் ஆசை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

திருச்சி விமானநிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, வாக்குபதிவு இயந்திரத்தில் போடப்பட்ட ஓட்டுகள் காணாமல் போய்விட்டதாக கூறுவது தொடர்பான கேள்விக்கு, ஒட்டுமொத்தமாக தவறு நடந்திருப்பதாக சொல்லிவிட முடியாது. சில தவறுகள் நேர்ந்திருக்கலாம் என்ன என்று கண்டுபிடிக்க வேண்டியது நம்முடைய கடமை என தெரிவித்தார். 

அரவக்குறிச்சி பிரச்னை முடிவா? ஆரம்பமா? என்ற கேள்விக்கு,  எப்படி இருந்தாலும் நேர்மையாக சட்டத்திற்கு உட்பட்டு நடப்போம் என பதிலளித்தார். 

தேர்தல் முடிவுக்கு பின்பு தமிழகம் புறக்கணிக்கப்படும் என்ற அச்சம் உள்ளதா? என்ற கேள்விக்கு, அது எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் அச்சம் ஆக இருக்க வேண்டியதில்லை சந்தேகமாக மட்டும் இருந்தால் போதுமானது என கூறினார். 

மோடியின் வருங்கால ஐந்தாண்டு ஆட்சி எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நன்றாக இருக்க வேண்டும் என்பது ஒரு இந்தியனான என் ஆசை என கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close