சிறு வயதில் காணாமல் போனவர் 24 வருடங்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு!

  அனிதா   | Last Modified : 01 Jun, 2019 12:51 pm
disappearance-man-has-been-handed-over-to-relatives-after-24-years

24 வருடமாக மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல் போன வட மாநிலத்தவரின் உறவினர்களை கண்டறிந்த மாநில குற்ற ஆவண காப்பகம் அவரை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளது.

ஒரிசா பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் மல்லிக் என்கிற புல்லு(37). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது இவரது தாய் இறந்துள்ளார். இதனால் எந்த இல்லாத ராஜ்குமார் தொலைந்து விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், மாநில குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் தாஹீரா ஒவ்வொரு காப்பகத்திலும் ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளார். பெரம்பலூரில் உள்ள வேலா கருணை இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட போது,  ராஜ்குமார் என்ற நபர் தன்னை குடும்பத்துடன் சேர்த்து வைக்கும்படி கூறியுள்ளார். மேலும், தனது சொந்த ஊர் ஒரிசா என்றும் தான் 1995 ஆம் ஆண்டு தொலைந்து விட்டதாகவும், விபரங்கள் கூறியுள்ளார்.

இவர் காப்பகத்தில் சிகிச்சைபெற்று தற்போது, சற்று முன்னேற்றம் அடைந்துள்ளார். இதையடுத்து ஆய்வாளர் தாஹீரா ஒரிசா பகுதியில் உள்ள சோரா என்ற காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, அவரது உறவினர்களை கண்டறிந்துள்ளார். பின்னர் உறவினர்களை சென்னைக்கு வரவழைத்து, ராஜ்குமார் மல்லிக்கை அவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர்களின் போக்குவரத்து செலவையும் குற்ற ஆவண காப்பகம் ஏற்று கொள்ளும் என ஆய்வாளர் தாஹிரா தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close