கோவில் திருவிழாவை நடத்த திமுக பிரமுகர் எதிர்ப்பு..

  அனிதா   | Last Modified : 01 Jun, 2019 04:56 pm
dmk-member-protest-against-temple-celebration

கோவில் திருவிழாவை நடத்த திமுக பிரமுகர் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பிரச்னை செய்வதாக கோவில் கும்பாபிஷேகம் நடத்தும் குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

சேலம் மாநகரம் அரிசிப்பாளையம் பகுதியில் உள்ள இராமலிங்க சொடேஸ்வரி திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் தற்போது பல கட்ட பிரச்சனைகளை கடந்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படியும், இந்து சமய அறநிலைய துறை வழி காட்டுதலின் படி கும்பாபிஷேகம் ஜூன் 6ம் தேதி நடத்த விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த விழா குழுவினர், திமுகவின் முக்கிய பிரமுகர் கலையமுதன் கோவில் விழாவை சீர்குலைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close