மதுரையில் பறிகொடுத்தவரிடமே நகைகளை விற்ற சம்பவம்! 4பேர் கைது..

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2019 09:52 am
robbery-in-madurai-4-members-arrested

மதுரையில், நகைக்கடை அதிபரின்  வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அவரிடமே விற்க சென்ற போது, கொள்ளையர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொள்ளையர்க‌ளிடமிருந்து 56 பவுன் நகைகளை மீட்டுள்ள காவல்துறை, மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நகைக்கடை அதிபரான சங்கர், குடும்பத்துடன் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இலங்கை சுற்றுலா சென்றபோது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், வீட்டில் இருந்த சுமார் 170 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். 

இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை சங்கர் என்பவரிடமே விற்பனை செய்ய வந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சங்கர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாடசாமி,ராமர், காளீஸ்வரன்,கார்த்திக் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 56 பவுன் நகை மற்றும் வைரங்களை மீட்டுள்ளனர். மேலும் கொள்ளைச் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட பிரபல கொள்ளையர்களான பல்லு பாலா, பாலமுருகன் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close