கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

  அனிதா   | Last Modified : 02 Jun, 2019 02:35 pm
drinking-water-shortage-risk-in-coimbatore

கோவையில் முக்கிய நீர் ஆதாரமான சிறுவாணி அணையில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடும் அபாயம் உள்ளது. 

கோவையின் மிக முக்கிய நீர் ஆதாரமான சிறுவாணி அணை, மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 863.40 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த சிறுவாணி அணையில் 878.50 மீட்டர் வரை நீரைத் தேக்கி வைக்க முடியும். இந்த அணை கேரளாவில் இருந்தாலும் நீரை அதிக அளவில் பயன்படுத்துவது கோவைதான்.

சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் சாடிவயல் நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வழியோரம் உள்ள 22 கிராமங்களுக்கும், மாநகராட்சியின் ஏறத்தாழ 23 வார்டுகளுக்கும் நீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுவாணி அணை மற்றும் அடிவாரப் பகுதிகளில் மழை எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக பெய்தது, இதனால் அணை சிலமுறை நிரம்பியது.

நடப்பாண்டில் சிறுவாணி அணை மற்றும் அடிவாரப் பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அணையின் நீர் மட்டத்திற்கு ஏற்ப சிறுவாணி அணையில் இருந்து சுத்திகரிப்புக்காக எடுக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டு வருகிறது. மேலும் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

சிறுவாணி அணையில் தற்போது உள்ள நீர் இருப்பை கொண்டு ஜூன் மாதம் பாதி வரை பல கிராமங்கள் மற்றும் மாநகர பகுதிகளுக்கு தண்ணீரை விநியோகிக்க முடியும். அதன் பின்னர் அடுத்த பருவமழை காலத்தில் தவறாது மழை பெய்தால் மட்டுமே அணையில் இருந்து நீர் எடுக்க முடியும் என மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது தொடங்க உள்ள தென்மேற்கு பருவமழை கை கொடுத்தால் மட்டுமே மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கும் இல்லை என்றால் சென்னை போன்று கோவையிலும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close