செல்போன் பறிப்பில் தவறவிட்ட 63 செல்போன்கள் மீட்பு!

  அனிதா   | Last Modified : 02 Jun, 2019 04:34 pm
63-cell-phones-recovery

சென்னை தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் தவறவிட்ட மற்றும் வழிப்பறி செய்யப்பட்ட 63 செல்போன்களை காவல்துறையினர் மீட்டு இன்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். 

சென்னை தி.நகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளை விரைந்து விசாரணை செய்து செல்போன்களை மீட்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விசுவநாதன், உத்தரவிட்டார். அதன்பேரில் தி.நகர் துணை ஆணையாளர் அசோக்குமார், தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

இதையடுத்து தனிப்படை போலீசார் காணாமல் போன் செல்போன் மற்றும் செல்போன் பறிப்பு வாக்குகளில் தொடர்புடைய செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ எண்களை வைத்து செல்போன்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட 63 செல்போன்களை துணை ஆணையர் அசோக்குமார் இன்று உரியாளர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள்  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close