திருச்சியில் களைக்கட்டிய ஓவியக்கண்காட்சி!

  அனிதா   | Last Modified : 02 Jun, 2019 07:02 pm
art-exhibition-in-trichy

திருச்சியில் பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையில் நடைபெற்ற ஓவியக்கண்காட்சியினை ஏராளமானோர் கண்டு வியந்தனர். 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில், கிரியேட்டிவ் விரீன் பள்ளி சார்பில் ஓவிய படைப்பாற்றலை வெளிக்கொணரும்  வகையில் ஓவியக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய இந்தக் கண்காட்சியில், தலைசிறந்த ஓவியர்களின் படைப்புகளும், இளம் ஓவியர்களின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. 

கற்பனை ஓவியங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பட்ட ஓவியங்களுக்கும், பல்வேறு தலைப்புகளின் கீழ் வரையப்பட்ட ஓவியங்களுக்கும், வெளிநாடுகளில் சிறந்து விளங்கும் காபி தூளில் வரையப்பட்ட ஓவியங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. 

இதில், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் என 5வயது முதல் 40 வயது வரையுள்ள ஓவியர்களின் 59 ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு வியந்து செல்கின்றனர். 

மேலும், ஓவிய ஆர்வத்தை தூண்டும் விதமாகவும், பள்ளி சிறார்களின் கலைநயத்தினை வெளிப்படுத்தும் விதமாகவும் இக்கண்காட்சி அமைந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close