நள்ளிரவில் சாலையோரம் அடிபட்டு கிடந்த வியாபாரி: கொலையா? விபத்தா? போலீஸ் விசாரணை

  அனிதா   | Last Modified : 03 Jun, 2019 09:10 am
midnight-accident-police-investigation

சென்னை திருவொற்றியூர் அருகே இரும்பு வியாபாரி ஒருவர் மர்மமான முறையில் அடிப்பட்டு கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை தண்டையார்பேட்டை,  துர்கா தேவி நகரை சேர்ந்தவர்  திருநாவுக்கரசு. இவர் கொடுங்கையூர்  கக்கன் தெருவில், ஸ்ரீனிவாஸ் எண்டர்பிரைஸ் என்ற பெயரில், இரும்பு ஸ்கிராப்புகள் விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி அன்று அம்பத்தூர் ஒரகடத்தில் இருந்து இரண்டு சரக்கு லாரிகளில் ரூ.7 லட்சம் மதிப்பிலான இரும்பு ஸ்கிராப்புகளை ஏற்றி வந்துள்ளார். 

நள்ளிரவு 12 மணி அளவில், சென்னை திருவொற்றியூர் அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் இரண்டு லாரிகளையும் நிறுத்திவிட்டு, எடைப்போடுவதற்காக, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் திருநாவுக்கரசு வராததால், லாரி ஓட்டுநர் திருநாவுக்கரசின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளனர். 

அப்போது சாலையின் நடந்து சென்ற முதியவர் ஒருவர் செல்போனை எடுத்து, ஒருவர் தலையில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்ததாக தகவல் தெரிவித்தார். இதனையடுத்து லாரி ஓட்டுநர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த திரு நாவுக்கரசை  மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி  மருத்துவமனையில் அனுமதித்தனர்.

திருநாவுக்கரசை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் மீது தாக்குதல் நடத்தியது போன்று தெரியவில்லை. விபத்து போல் உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, மஞ்சம்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற பகுதிகளில், சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும், திருநாவுக்கரசுக்கு என்ன நேர்ந்தது என தெரியாமல் திணறி வருகின்றனர். 

மேலும், ரூ, 7 லட்சம் இரும்பு லோடை திருடுவதற்கு திரு நாவுக்கரசு தாக்கப்பட்டாரா அல்லது விபத்தை ஏற்படுத்தி, அவரை கொல்ல முயன்றனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close