மதுரை: மாவட்ட ஆட்சியர் கார் முன்பு குழந்தையுடன் பெண் தர்ணா!

  அனிதா   | Last Modified : 03 Jun, 2019 03:55 pm
a-girl-dharna-before-the-district-collector-s-car

வடமாநிலத்தில் கொத்தடிமையாக உள்ள தனது கணவரை மீட்டுத் தரக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரின் கார் முன்பு பெண் ஒருவர் தனது குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாண்டியராஜன், மாரியம்மாள் தம்பதி.  இவர்களுக்கு ஆந்திராவில் வேலை வாங்கி தருவதாக கூறி ராம தேவர் என்பவர் அழைத்து சென்றுள்ளார். அங்கு முறுக்கு செய்யும் சிறிய நிறுவனத்தில் இருவருக்கும் வேலைவாங்கி கொடுத்ததாகவும், கூடவே, சித்ரவதை படுத்தியதாகவும் மாரியம்மாள் கூறுயுள்ளார்.  

தற்போது அவர்களிடம் இருந்து தப்பித்து வந்ததாக கூறியுள்ள மாரியம்மாள், அவர்களிடம் சிக்கியுள்ள தனது கணவர் பாண்டியராஜை மீட்டு தரக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆட்சியரின் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close